மோகன்பாபுவும், ரஜினிகாந்தும் திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்கிற ரஜினிகாந்தின் முடிவுக்குப் பின்னால் மோகன்பாபுவும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் ’அண்ணாத்தே’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

படப்பிடிப்பு இடைவேளையில் மோகன்பாபுவின் மகள் லக்‌ஷ்மி மன்சு ரஜினிகாந்தை சந்தித்து அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சில தினங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். தற்போது மோகன்பாபு – ரஜினிகாந்த் என இருவரையும் வைத்துத் தனியாக ஒரு ஃபோட்டோஷூட்டே நடத்தியிருக்கிறார் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு.

இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷ்ணு, “அசல் கேங்க்ஸ்டர்கள் – ரஜினிகாந்த், மோகன்பாபு மற்றும் கோமாளித்தனமான விஷ்ணு மன்சு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.