பிறந்தநாள் அன்று கட்சிப் பெயரை அறிவிக்கிறார் ரஜினி

சென்னை

தோ, அதோ” என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் சுமார் முப்பது வருடம் தள்ளிப்போய்விட்டது(!). ஆனால் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி பேசிய பேச்சுக்கள், நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே தோன்றுவதாக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களும் நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜூலை (2017) மாத கடைசியில் கட்சியை அறிவிப்பார் என்று ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்தார்.

இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று அதாவது வரும் (2017) டிசம்பர் 12ம் தேதி அன்று கட்சி பெயரை அறிவிப்பார் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.

மேலும், “கட்சி துவங்க இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்று ரஜினி நினைக்கிறார். வரும் டிசம்பரில் கட்சி பெயரை துவக்கி முழு வீ்ச்சில் செயல்பட திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறார்” என்று கூறப்படுகிறது

 


English Summary
Rajnikanth may announce his party name on his birth day