மாட்டிறைச்சி விவகாரம்: மத்தியஅரசுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்!

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி குறித்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

ஏற்கனவே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டுக்கறி சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி  கடந்த மே 19ந்தேதி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மத்தியஅரசுக்கு எதிராக புதுச்சேரி பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி தீர்மானத்தை முன் மொழிய உள்ளார்.

ஏற்கனவே கேரளா, மேகாலயாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


English Summary
Beef issue: Puducherry legislative resolution against central government