பாரிஸ்:

டந்த மாதம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியிடம், முதல் ரஃபேல் போர் விமானம் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்திருந்த நிலையில், அக்டோபர் 8ந்தேதி முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்தை பெற ராஜ்நாத் சிங்: பிரான்ஸ் நாட்டுக்கு  செல்ல உள்ளார்.

பிரெஞ்சு விமான  நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா பிரான்சுடன் கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை 7.8 பில்லியன் யூரோவுக்கு வாங்க ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதா எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி உள்ள நிலையில், இது தொடர்பான வழக்கும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உளளது.

இந்த நிலையில், ஒப்பந்தப்படி, முதல் ரஃபேர் போர் விமானம் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வர உள்ளது.  இதற்காக பிரான்ஸ் நாட்டில் அக்டோபர் 8ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொள்கிறார். இதற்காக அடுத்த மாதம் பிரான்ஸ் செல்லும் அமைச்சருடன், பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் உள்பட மூத்த அதிகாரிகளும் செல்வதாக கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் மாதம் ரஃபேல் போர் விமானம் தருவதாக டசால்ட் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவித்த அன்று சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், அதைத் தொடர்ந்து, இந்திய விமானிகளுக்கு   ரஃபேல் போர் விமானம் இயக்கப்படும் பயிற்சியை மேற்கொண்டுவிட்டா அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, அடுத்த மாதம்  (அக்டோபர்)  8ந்தேதி  ராஜ்நாத் சிங் பிரான்ஸ் செல்லும்போது, இந்திய விமானப்படை வீரர்கள் ரஃபேர் போர் விமானத்தை இயக்கி காட்டும் வகையில் திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப் படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் துர்கா பண்டிகையான,  தசரா பண்டிகை கொண்டாடப்படும் நாளாகும்.   எனவே, அன்றைய தினம் போர் விமானத்தை பெறுவது சரியாக இருக்கும் என்றும் நம்பப்படுவதாகவும் அதனாலேயே அன்றைய தினம் விமான கொள்முதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.