டெல்லி:
ராஜீவ் கொலையில் உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரி விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த மனித வெடிகுண்டுவான தனு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்று கூறும் புலனாய்வு அமைப்பினர், அதை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, இது தொடர்பாக 4 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் வெளிநாட்டுக் கை சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையையும், 4 வாரங்களுக்குள் மத்திய புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.