புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யவது தொடர்பாக தமிழகஅரசு தாக்கல் செயதுள்ள சீராய்வு மனுவின் விசாரணை வரும் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணைமனு மீது, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க தாமதமானதை தொடர்ந்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
suprme court
இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை காலத்தை கருத்தில்கொண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்து, சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், தமிழக அரசின் இந்த முயற்சியை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால், அவர்கள் ஏழு பேரை விடுதலை ஆவதில்  சிக்கல் நேரிட்டது.
வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தியதால், தமிழக அரசுக்கு அவர்களை விதலை சுப்ரீம் அவர்களை விடுதலை செய்ய உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதன் காரணமாக அவர்கள் விடுதலையாவது மேலும் சிக்கலாகியது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி,  கைதிகள் விடுதலை தொடர்பாக ஏற்கனவே ஒரு மறுஆய்வு மனு விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், அந்த மறு ஆய்வு மனு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  இதையடுத்து வழக்கை வரும் 8ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.