ben1
ஆனந்தி பென் படேல் ராஜினாமா: குஜராத்தில் பாஜக தலை தப்புமா?

நான் என் அலுவல் வேலையில் மூழ்கி இருந்தபோது, எனது அலைபேசி யில் “நெருப்புடா” எனும் ரிங்டோன் அலறியது.  ஒரு நண்பர் அழைத்து,” குஜராத்தில், ஆனந்தி பென் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் எனக் கூறினார். அதனைக் கேட்டு என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட என் சக ஊழியர் சட்டென நிமிர்ந்து என்ன செய்தி? என ஆவலுடன் கேட்டார்.
நான் ஆனந்தி பென் ராஜினாமா செய்தியைக் கூறியதும், “ஏன் ?” எனக்கேட்டு சிரித்தார்.
நான் ” ஏன் இவ்வளவு தாமதம் ? என்பது தான் உண்மையான கேள்வியாக இருக்க வேண்டும் என்றேன்.
இது தான் இந்தக் கட்டுரையின் சாரம்சம். ஆனந்தி பென்னை அகற்றுவது எனும் முடிவினை பாஜக மிகவும் தாமதமாக எடுத்தது ஏன் ? குஜராத்தில் பாஜக வின் சரிவு துவங்கி விட்டதா? பா.ஜ.க வால் சரிவைத் தடுத்து நிறுத்த முடியுமா? மீண்டும் ஆட்சியை உயர் சாதி பட்டேலிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது திறமையான நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதைப்  பார்ப்போம்.
குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் தமது பதவியை ராஜினாமா செய்வது குறித்த முக்கியமான முடிவினை ஒரு பேஸ்புக் நிலைத்தகவல் மூலம் வெளிப்படுத்தினார். ஆன்லைனில் அதை பார்த்துத் தெரிந்துக் கொண்ட பாஜக நாடாளுமன்றக் குழு, தற்போது விவாதித்து வருகின்றது.

ஆனந்தி பென் படேல் தமக்கு விரைவில் 75 வயது பூர்த்தி ஆகவிருப்பதால் தாம் பதவி விலகி இலம் தலைமுறைக்கு வழிவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனந்தி பென் சாமர்த்தியமாக, கடந்த சில வாரங்களாக, நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் தலித்துகள்மீது தொடர்ந்து ஏவப்பட்டு வரும் கொடூரங்கள், அதற்குத் தலித்துகள் ஆற்றி வரும் எதிர்வினைகள்குறித்து வாய் திறக்கவில்லை. அடுத்த தலைவரை கட்சி வளர்த்தெடுக்க உதவும் வகையில் தான் ராஜினாமா செய்ய விரும்புவதாக அதில்  தெரிவித்தார்.
பசு அரசியலில் ஈடுபட்டு வரும் இந்து அமைப்புகளை எதிர்த்து முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்து மிகப்பெரும் போராட்டத்தினைமுன்னெடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையைத் திசைதிருப்பவே, பாஜக ஒரு திட்டமிடப்பட்ட “ராஜினாமா” நாடகத்தை அரங்கேற்றிவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

உடனடி மற்றும் நீண்ட கால எதிர்கால திட்டங்கள்குறித்து விவாதிப்பதற்கு முன்னர்,
ஒரு சில அடிப்படை கேள்விகளுக்கு விடை தெரிவது அவசியம்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பாஜக தேர்தலில் தோற்காத குஜராத் மாநிலத்தில் பாஜக நிலைமை படுமோசமானதற்கு ஆனந்தி பென் படேலின் நிர்வாகக் குறைபாடு தான் காரணமா ?
ஆம் என்றால், அடுத்த சட்டசபைத் தேர்தல் நவம்பர் 2017ல் வரவுள்ள நிலையில், பாஜக தலைமை இவரை நீக்க இவ்வளவு காலம் தாழ்த்தியது ஏன்?
“ஒருவருக்கு வழங்கப்பட இருக்கும் பதவிக்குத் தகுதியுள்ளதா என்று ஆராயாமல், அவர் தற்போதைய பதவியில் காட்டும் திறமை மற்றும் விசுவாசத்தை வைத்துப் பதவி உயர்வு வழங்குவது” பீட்டர் மேலாண்மை கொள்கை ஆகும்.
ஆனந்தி பென் விசயத்தில் பீட்டர் மேலாண்மை கொள்கைப்படி தான் முதவராக்கப் பட்டார் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளத.
ஆனந்தி பென் ஒரு சிறந்த மோடி விசுவாசி.ஆனால் முதல்வர் பதவிக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை.
அப்படியானால் ஒரு தவறான தேர்வைச் செய்தது யார் யார், கட்சியா? மோடியா?
பிரதமர் நரேந்திர மோடி, அவரது சொந்த மாநிலத்தில் முதல்வராய் இருந்தபோது வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளர்வதற்கு அனுமதிக்காதன் விளைவே குஜராத்தில் தற்போது பாஜக இருக்கும் மோசமான சூழ்நிலைக்குக் காரணமாகும்.

இரண்டாம் கட்டத் தலைவர்களை வளரவிட்டால், எங்கே தன்னை தூக்கிஎறிந்து தன் பதவியைப் பிடித்துவிடுவார்களோ என்று எண்ணும் பாதுகாப்பின்மை உணர்வு ஒரு தலைவருக்கு (மோடி) ஏற்பட்டதன் விளைவே குஜராத்தில் மோடிக்கு மாற்றாகச் சிறந்த நிர்வாகியைப் பாஜக வால் முன்னிறுத்த முடியாதற்கு காரணம்.
அதன் எதிரொலிதான், மக்கள் செல்வாக்கு மிக்க இரண்டாம் கட்டத் தலைவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, மோடியின் விசுவாசியான படேல் பதவிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.
பதவியேற்ற முதல் நாளில் இருந்தே, படேல் அரசியல் நிர்வாகம் முறையானதாக இல்லை.
அவருக்கு வெகுஜன ஆதரவு குறைவாகவே இருந்தது. ஆட்சியில் பெரும் நிர்வாகத் திறன் இழந்து காணப்பட்டார்., மேலும், குறிப்பிடத் தக்க பகுதியினர், அதிகாரப் பதவிக்கு போட்டியிடுவது நடைபெற்றது. இது அனைத்துமே, ஊரறிந்த ரகசியமாகே இருந்தது. இதில் ஆனந்தி பென்னை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவரது திறமைகளும், பலவீனங்களும் மோடி நன்கு அறிந்ததே.
மோடி பிரதமர் ஆகி தில்லி சென்றபொது, அவரது தொகுதியான காந்திநகரை ஆனந்திபென்னுக்கு ஒப்படைத்திருக்க கூடாது. அவரின் முடிவால், ஒரு நிர்வாக வெற்றிடம் ஏற்படும் என்பதை மோடி எதிர்பார்க்க வில்லை. இது அவரது நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.
2014 இல் ஆனந்தி பென் முதல்வர் பொறுப்பேற்ற சில மாதங்களுக்குள், நிச்சயம் இவரால்
2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலை வழி நடத்த முடியாது என்று தெளிவாகவிட்டது.
அது குஜராத் பாஜகவிற்கு ஏற்பட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் உறுதியானது. உனா, கிர்-சோம்நாத்தில் தலித்துகள்மீதான வன்முறை, மாநிலம் தழுவிய தலித்துகளின் போராட்டம் என அனைத்திலும் அவரது நிர்வாகத் திறமை வெளிப்பட்டது.
அடுத்த முதல்வராக ஜெயின் சமூகத் தலைவரும், ராஜ்கோட்டைச்  சார்ந்த விஜய் ரூபனி மர்றும் அம்ரேலியைச் சேர்ந்த  பர்சோத்தம் ரூபலாவின் பெயர் அடிபடுகின்றது.


அகமதாபாத்தில் பட்டேல் போராட்டம்

குஜராத் முதல்வர் மாற்றம் நெடுநாளையக் கேள்வியாய் இருந்தாலும்.
மோடி-ஷா இரட்டையர்கள் இதனைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்ததன் காரணம், புதிய முதல்வராகப் பலதலைவர்களும் ஆர்வம் காட்டி வருவது தான். இது உட்கட்சிப்பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்று இரட்டையர்கள் கருதியது, இன்று தர்மசங்கடமான நிலைமையைக் குஜராத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்திபென் முதல்வராக நீடித்தது, மோடி-ஷா இரட்டையர்களுக்கு ஒரு தலைவலி உருவாவதை தடுத்துவந்தது.


 
குஜராத்தில் தலித் போராட்டம்

பிஜேபியின் முதல்வராக வேறு யாராவது இருந்திருந்தால் கூட பட்டேல், தலித்துகள் போராட்டங்களுக்கு கிட்டத்தட்ட இதே அணுகுமுறையைத் தான் பின்பற்றி இருப்பார்கள். ஏனெனில், பாஜகவின் கொள்கைகள் அப்படி. என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர்.
குஜராத் மாநில ஆட்சியிலும் சரி, மத்திய ஆட்சியிலும் சரி, பாஜக வால் ஒரு திடமான முடிவினை எடுக்க முடியவில்லை. அது, பட்டேல் போராட்டமாய் இருந்தாலும் சரி, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகுறித்த சங்பரிவாரின் தலைவர் மோகன் பகவத்தின் அறிக்கையானாலும் சரி.
இதேபோல், பாஜக, மோடி அரசு, தலித் மக்களிடம் நன்மதிப்பை பெறத் தவறி விட்டது. உண்மையில் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் அது தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் கட்டவிழ்த்தப்படுவது ஒரு முரண்பாட்டைக் குறிக்கின்றது.
 
ben3
ஆனந்தி பென் படேல் ராஜினாமா தலித் மக்களைப் பாஜக பக்கம் திருப்பும் என்று நம்புகின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது தலித் மக்களின் நன்மதிப்பை பெறத் தவறிவிட்டது.
சொல்லப்போனால், குஜராத்தில் பாஜகவின் வீழ்ச்சி ஒன்றரைவருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டது.

மோடி – அமித் ஷா இரட்டையர்கள், கட்சியின் செல்வாக்கு சரிந்ததற்கு தங்களைத் தான் நொந்துக் கொள்ள வேண்டும். வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சொந்த அணி பக்கமே கோல் அடித்தால் “செல்ஃப்-கோல்” என்று சொல்வார்கள். அரசியலில், செல்ஃப்-கோல் என்றால் அது குஜராத்தில் பாஜக அடித்துள்ளது தான்.
இதையும் படிக்கலாமே : தமிழக ஆளுநராகின்றார் ஆனந்தி பென்