சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு 8வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர். இதில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து, கடந்த ஆண்டு விடுதலையானார். முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தொடர்ந்து பரோல் வழங்கியது. அதைத்தொடர்ந்து, வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கும் பரோல் வழங்கியது. அதுபோல மற்றொரு குற்றவாளியான ரவிச்சந்திரனுக்கும் பரோல் வழங்கி உள்ளது.
இந்த நிலையில், நளினியின் பரோல் 8வது மாதமாக மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு 8வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நளினியின் பரோலை திமு கஅரசு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்று பரோல் வழங்கியது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தங்கி தனது தாயாரை கவனித்து வருகிறார். தொடர்ந்து ஏழு முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரோல் முடிந்து அவர் நாளை சிறைக்கு திரும்ப வேண்டியிருந்தது. இந்த நிலையில், தற்போது 8வது மாதமாக பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு தாராளம் காட்டி உள்ளது.