ரஜினியின் பஞ்ச் வசனங்கள்… யாருக்கு பொருந்துகிறது?

Must read

நெட்டிசன்:

வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களது முகநூல் பதிவு:

சசிகலா: முழுசா சந்திரமுகியா மாறியிருக்கிற கங்காவேப் பார்..

எடப்பாடி: சின்னம்மா சொல்றாங்க நாங்க செய்யறோமுங்க

ஓ.பி.எஸ்: கெட்ட பய சார் இந்தக் காளி

தினகரன்: ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்றுவான்..

ஸ்டாலின்: ஒரு நாளில்ல ஒரு நாள் நானும் இதே இடத்துக்கு வரலை எம்பேர் அண்ணாமலை இல்லேடா..

இராமதாஸ்: இதெப்படி இருக்கு…

வை.கோ: என் வழி தனி வழி

தமிழிசை: தலைவர் நான் தான் ஆனா நான் எடுக்குற முடிவு என்னுதில்லை…

ஜேட்லி: அதிகமா வரி கட்டாத ஆம்பிளையும் அதிகமா தங்கம் வாங்குற பொம்பிளையும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை….

ராகுல்: நீ ஃபாரீனுக்கே போய்டு ராகுல்ஜி …

கேப்டன்: பன்னிங்க தான் கூட்டம் கூட்டமா தாவிடும்..  சிங்கம் சிங்கிளா நிக்கும்…

சு.சாமி: நான் சொல்றதையும் செய்வேன்… சொல்லாததையும் செய்வேன்….

பாரில் க்யூவில் நிற்கும் மக்கள்: கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது…

மோடி : கண்ணா இது ட்ரைலர் தான்… மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு…

இன்கம்டாக்ஸ் ரெய்டு : பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல

 

More articles

Latest article