சென்னை: ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஜினி மக்கள் மன்றம் முக்கிய அறிக்கை வெளியிட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக பல ஆண்டுகளாக கூறி வந்த நிலையில், தற்போது, டிசம்பர் 31ந்தேதி அதுகுறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும்,  வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரஜினியின் கட்சி பெயர், அவரது கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலம் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதன்படி,  நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவரத கட்சிக்கு, ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அதன் நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில்  முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது, அதில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடைய என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக்காவலர்கள் காத்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’, சின்னம் ‘ஆட்டோ’! தேர்தல் ஆணையத்தில் பதிவு…..

ரஜினியின் ‘மக்கள் சேவை கட்சி’ எந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?