சென்னை,
கடந்த 15ம் தேதி முதல் ஒருவாரம் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. ஏற்கனவே கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை செய்யப்போகிறேன் என்றும், போட்டோ எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்று அறிவித்த ரஜினி கடைசி நேரத்தில் ஜகா வாங்கினார்.
அதைத்தொடர்ந்து கடந்த15ந்தேதி முதல ரசிகர்களை முதல்கட்டமாக 17 மாவட்ட ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தார். அப்போது அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதற்காக சென்னை வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கே கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராக வேந்திரா மண்டபத்தில் இருக்குமாறும், ரசிகர்களுடன் போட்டோ மட்டுமே எடுத்துக்கொள்வார் என்றும்,
ரஜினியை சந்திக்கும்போது, அவருக்கு மாலைள் அணிவிப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது போன்று எந்தவித மரியாதையும் செய்யக்கூடாது என்றும்,
குறிப்பாக எக்காரணம் கொண்டு காலில் விழக்கூடாது என்றும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நடந்திருப்பதோ வேறு. அவருடைய ரசிகர்கள் பெரும்பாலோர் அவர் காலில் விழுந்து வணங்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இதை பார்க்கும்போது… ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ளது.
இவரும் மற்றவர்களை போல மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியாகத்தான் இருப்பார் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு.
ஊருக்குத்தான் உபதேசம்…..
[youtube https://www.youtube.com/watch?v=FmNJ-_QdNHg]