சென்னை,

மிழக விவசாயிகளின் பயிர்கடன் காப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளது தமிழக அரசு. இதன் காரணமாக விவசாயிகளின் வங்கி கடன் விரைவில் தள்ளுபடியாகும்.

தமிழகத்தில் வறட்சி காரணமாக இந்த ஆண்டு விவசாயம் பொய்த்து போனது. பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுவதை காண முடியாமல் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

விவசாய சங்கங்களின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டில்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு  403.79 கோடி ரூபாய் பயிர்கடன் காப்பீட்டுத் தொகை வங்கிகளில் டெப்பாசிட் செய்துள்ளது.

இதன் காரணமாக பயிர்க்காப்பீடு செய்த 2.96 லட்சம் விவசாயிகளின் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களின்  வங்கிக் கணக்கில் காப்பீடுக்கான பணம்  ஓரிரு நாட்களில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.