கருணாநிதிக்கு, கலைஞரின் வைரவிழா அழைப்பிதழ்!

Must read

சென்னை,

ரும் ஜூன் 3ந்தேதி கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சட்டமன்ற வைர விழா நடைபெற இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாப்பட இருக்கிறது.

அத்துடன் கருணாநிதி தமிழக சட்டமன்றத்தில் தேர்வாகி 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவும் நடத்த திமுக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

அன்று சென்னையில் நடைபெற இருக்கும் கருணாநிதியின் வைர விழாவில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், முன்னாள் முதல்வர் லல்லு உள்பட வடமாநில தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இதற்கான அழைப்பிதழ் அனைவருக்கும் நேரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் வைர விழா அழைப்பிதழை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கருணாநிதியிடம் வழங்கினர். அதை கருணாநிதி பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்தும் வைர விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

More articles

Latest article