மனுஷ்யபுத்திரன் – சல்மா

சென்னை:

தி.மு.க. பேச்சாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனை அதே கட்சியைச் சேர்ந்த கவிஞர் சல்மா, “மனநோயாளி” என்று விமர்சித்துள்ளார்.

கவிஞர் கடங்கநேரியான், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்திருந்தார். அதில்,” ஜூன் 2011 ஆம் ஆண்டு உயிர்மை தலையங்கத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியது .:

தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் ஆழமான சில தார் மீக உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனுக்குச் செய்த ஆடம்பரத்

மனுஷ்யபுத்திரன் எழுதியது குறித்த பதிவு

திருமணத்தின் மூலம் ஏழ்மை மிகுந்த ஒரு சமூகத்தின் தார்மீக உணர்ச்சிகளை அவமதித்தார் என்றால் அதைவிடப் பல மடங்கு அவமதிப்பினை தி.மு.க. இந்த ஐந்தாண்டுகளில் செய்தது. தன்னுடைய பல்வேறு குடும்பங்கள், கிளைக் குடும்பங்களின் அதிகாரப் போராட்டத்திற்கான மையமாக ஒரு அரசை, ஒரு கட்சியை மாற்றுவதன் அபாயம் குறித்து கருணாநிதி புரிந்து கொள்ளவே இல்லை.

இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டதே தவிர, தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்டதல்ல என்பதை கருணா நிதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஏற்கவில்லை. அவர்கள் கருணாநிதியின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருப்பதாலேயே அதிகாரம் செலுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதினார்கள். அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காக ஒருவரை ஒருவர் ரகசியமாக வேட்டையாடினார்கள், சதிகளில்

சல்மா பின்னூட்டம்

ஈடுபட்டார்கள், தீ வைத்து எரித்தார்கள், வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள். ஒரு ஜனநாயக அமைப்பின் மக்களது உணர்ச்சிகளை நாம்

அவமதிக்கிறோம் என்று யோசிக்கக்கூடிய ஒருவர்கூட அங்கு இல்லை” என்று ஏற்கெனவே மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்ததை பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அவர்களில் தி.மு.க. பிரமுகர் கவிஞர் சல்மா, மனுஷ்யபுத்திரன் குறித்து “ மனநோயாளி…எங்களது கட்சியை விமர்சனம் செய்து விட்டு இன்று பணம் சம்பாதிக்க வந்திருக்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.