சவுந்தர்யா-விசாகன் திருமணம்: ஸ்டாலின், வைகோ, கமல் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)

சென்னை:

டிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் பட்டினம்பாக் கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசில் இன்று காலை இந்துமுறைப்படி திருமணம் இனிதே நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, கோவை தொழிலபதிபர் விசாகன் இடையே உருவான காதல் காரணமாக, இருவருக்கும் மறுமணம் செய்ய இரு வீட்டார்கள் முடிவு செய்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை திருமணம் நடைபெற்றது.

சவுந்தர்யா ஓட்டலில் விசாகன் மூன்று முடிச்சு போட்டார்.  பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,   நடிகர்கள் கமல்ஹாசன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், இயக்குனர் மணிரத்தனம்,  பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Edappadi palanisamy, eps ops participate, Kamalhassan, Rajnikanth, soundaraya wedding, SoundaryaRajinikanth, SoundaryaWedsVishagan, stalin, vaiki, wedding invitaion, எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், சவுந்தர்யா மறுமணம்!, சவுந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி திருமண அழைப்பிதழ், ரஜினிகாந்த், விசாகன் வணங்காமுடி, வைகோ, ஸ்டாலின்
-=-