சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக திமுக அறிவித்துள்ள கையெழுத்து இயக்கம் கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்து பெற்றார்.

பாஜக அரசின் #CAA_NRC_NPR ஆகியவற்றுக்கு எதிராக, கோவளம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் ரஜினியின் நேற்றைய பேட்டி குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ் டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தால், ஏற்படும் கொடுமைகள், கஷ்டங்களை, முதலில் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

குடியுரிமைச் சட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்து ரஜினி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை அதன் விளைவுகள் ரஜினிக்கு தெரிந்திருந்தால், தனது நிலைப்பாட்டை அவர் மாற்றி இருப்பார் என கூறினார்.