சென்னை

றைந்த திரு ஆர் எம் வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசி உள்ளார்.

நேற்று தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் காலமானார். 98 வயதாகும்  அவர். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.  நேற்று காலை ஆர்.எம். வீரப்பனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பிற்பகல் உயிரிழந்தார். பல அரசியல் தலைவர்கள் ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவை அடுத்து, சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டு உள்ள அவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்,

“பணம், பெயர், புகழுடன் வலம் வந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவர் எப்போதும் பணத்துக்குப் பின்னால் சென்றது கிடையாது. பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வாழ்ந்தவர். அவருடனான எனது நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. என் வாழ்நாளில் அவரை மறக்க முடியாது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” 

என்று கூறியுள்ளார்.