சென்னை:
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குத்தான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். தலைச்சுற்றல் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “ரஜினி சிறு தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார்.

சிகிச்சைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.