சென்னை

மிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”இலங்கை கடலோரப்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழகக் கடலோரப் பகுதியில்‌ நீடிக்கும்‌ குறைந்த தாழ்வழுத்த பகுதி காரணமாக,

31.10.2021 முதல்‌ 02.11.2021 வரை: (ஆரஞ்சு எச்சரிக்கை)

டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

03.11.2021, 04.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை)

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிகக் கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌, மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நோரத்குற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்”‌.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.