மனைவியுடன் நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

Must read

காஞ்சிபுரம்

நேற்று நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் அத்திவரதரை தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன விழா சென்ற மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனம் தரும் அத்திவரதரை காண நாடெங்கும் இருந்து ஏராளாமான பக்தர்கள் வருகின்றனர். முன்பு சயன கோலத்தில் தரிசனம் அளித்த அத்தி வரதர் தற்போது நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார்.

அத்திவரதர் மீண்டும் வரும் 17 ஆம் தேதி அன்று அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட உள்ளார். இதனால் தற்போது அத்திவரதரை தரிசிக்க ஏராளமான கூட்டம் அலை மோதுகிறது. நேற்று அத்திவரதரை தரிசிக்க குறைந்தது 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

நேற்று நள்ளிரவு சுமார் 12 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசிக்க திடீர் என வந்துள்ளார். அவர்கள் விவிஐபி நுழைவாயில் வழியாக வந்துள்ளனர். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் சரவணன் வரவேற்பு அளித்தார். ரஜினிகாந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசனம் செய்த போது அவர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article