அண்மையில் அண்ணாத்த திரைப்பட படப்படிப்புகளை முடித்த ரஜினிகாந்த், சிறுநீரக பரிசோதனை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

அங்கு மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு, மாவட்ட நிர்வாகிகளை சென்னை வரச்சொல்லி அவசர அழைப்பு விடுத்தார். இனி அரசியலில் எக்காலத்திலும் ஈடுபடப் போவதில்லை என்பதால் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, ரசிகர் மன்றமாக தொடர இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாகியிருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ரஜினிகாந்த் தாத்தா ஆனதை அவருக்கு சர்ப்ரைஸாக கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.