ரஜினியுடன் கமல் ஒரே ஸ்டுடியோவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு…

ஜெயிலர் படத்தை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை போலவே பிஸியாக நடித்து வரும் உலகநாயகன் கமலஹாசன் அடுத்ததாக ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

தலைவர் 170 மற்றும் இந்தியன்-2 ஆகிய இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டுடியோவில் நடைபெறும் நிலையில் ரஜினி – கமல் இருவரும் இன்று படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்டனர்.

இருவரும் இதே அரங்கில் 21 ஆண்டுகள் கழித்து சந்தித்ததாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.