சென்னை:

ர்நாடக காவியின் தூதுவர் ரஜினிகாந்த் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியதில் எந்தவித பிழையுமில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவத்து உள்ளார்.

காவிரி பிரச்சினை போராட்டத்தின்போது, காவலர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஜினி, சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதில் பதில் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,  தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினிகாந்த் என்பது இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்றம்,

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது, குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுனீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா? எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களே என்று;ம, ஓ! இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகாக் காவியின் தூதுவர் என்று. உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது என்று  கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சீமான், ரஜினியை கர்நாடகாவின் தூதுவர் என பாரதிராஜா கூறியதில் பிழையில்லை என்று கூறினார். அதே வேளையில்  ரஜினி தமிழகத்தில் நடிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை, ஆனால், தமிழகத்  ஆள நினைக்கும்போதுதான் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படுகிறது என்றார்.  தமிழினம் மீண்டும் அடிமைப்பட்டுக்கிடக்க முடியாது என்றும் சீமான் கூறினார்.