அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார் ரஜினிகாந்த்: தனி விமானம் மூலம் பயணம்

Must read

சென்னை: அண்ணாத்த படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்று இருக்கிறார்.

சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். ஜனவரியில் கட்சி தொடங்க போவதாகவும் தெரிவித்தார்.

முழுமையாக அரசியலில் ஈடுபடும் முன்பாக அண்ணாத்த படத்தை முடித்து கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.  அந்த படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் ரஜினிகாந்த் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் சென்று இருக்கிறார்.

More articles

Latest article