சென்னை:

மிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான், அதை ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் திமுக தென்மாவட்டச் செயலாளரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி யின் மகனுமான மு.க.அழகிரி கூறினார்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமையுள்ள தலைவர்கள் தமிழகத்தில் மறைந்ததைத் தொடர்ந்து, ஆக்கப்பபூர்வமான தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பல அமைப்புகள், பல கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அந்த வெற்றிடத்தை, அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி நிரப்பிவிட்டதாக அதிமுகவினர்களும், திமுகவில், முக ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுகவினர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சில மாதங்களுக்கு முன்பு நடந்த கல்லூரி விழாவில்பேசி ரஜினி, தமிழகத்தில் அரசியல் வெற்றி உள்ளது என்று கூறினார். சமீபத்தில் நடிகர் கமலுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ஏற்கனவே கூறிய அரசியல் வெற்றிடம் குறித்து பேசினார். தமிழகத்துக்கு ஆளுமை வெற்றிடம் இன்னும் தொடர்வாக  கூறினார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். அதுபோல, தி.மு.க தலைவர்களும் ரஜினியை வசை பாடினர்.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த மு.க.அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் அதை ரஜினி நிரப்புவார் என்றார். ரஜினி கட்சி தொடங்கினால் அதில் நீங்கள் சேருவீர்களா? என்ற கேள்விக்கு மு.க. அழகிரி பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.