இளையராஜாவுக்கு ரஜினி, கமல், விஜயகாந்த் வாழ்த்து

Must read

சென்னை:

2018-ம் ஆண்டிற்கான பத்மவிபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து அவருக்கு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,‘‘விருதுக்கான தகுதியை இளைமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ரசிகரும் மன்னிப்பர். மேலும் விருதும், நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷால் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,‘‘இசைகடவுள் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய 2-வது விருது அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். .

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழக கிராமிய இசைக்கலையை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினி உள்ளிட்டோரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article