
சென்னை:
தனது படத்தை வெற்றிகரமாக ஓட்டுவதற்காக, தாம் நடிக்கும் படங்களில், இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கி உள்ள நடிகர் ரஜினிகாந்த்-தான் தமிழகத்தின் சமூக விரோதி என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக சாடினார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ரஜினி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணம் சமூகவிரோதிகள் என்று கூறியிருந்தார்.
ரஜினியின் கருத்துக்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெய்வேலியில் மத்திய, மாநில அரசிற்கு எதிராக போராடியதற்காக தம்மை தேச துரோக வழக்கில் அரசு கைது செய்திருப்பதாக கூறினார்.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை ரஜினி சமூக விரோதி என்று கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வேல் முருகன், தனது திரைப்படம் ஓட வேண்டும் என்பதற்காக இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமைபடுத்திய நடிகர் ரஜினிகாந்த்-தான் சமூக விரோதி என்றும் குற்றம் சாட்டினார்.
[youtube-feed feed=1]