சென்னை:

“ரஜினியை ஆதரிப்பதும் மது போதையும் ஒன்றுதான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சீமான் அளித்த பேட்டி ஒளிபரப்பானது. .

இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சீமான் அளித்த பதில்களின் தொகுப்பு.

“முகமது பின் துக்ளக் போல இருந்தாலும் எங்கள் தமிழன் ஆளட்டும். ரஜினி வந்து என்ன செய்யப்போகிறார்.. அதைவிட பத்து மடங்கு, நூறு மடங்கு நாங்கள் செய்வோம்.

சிஸ்டம் சரியில்லை என்று இப்போது ரஜினி சொல்கிறார். நான் பத்து வருடமாக இதைத்தானே சொல்லி வருகிறேன்.

நாட்டுக்காக உழைப்பவர்கள் முதல்வராகத்தான் வர வேண்டுமா. சினிமா வாய்ப்பு போய்விட்டால் முதல்வர் பதவிக்குத்தான் குறிவக்க வேண்டுமா…. ராணுவத்தில் சேரந்து தேசப்பணி ஆற்றட்டுமே” என்று சீமான் தெரிவித்தார்.