சென்னை
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் செய்ததற்கு ர்சிகர் மன்றம் கனடனம் தெரிவித்துள்ளது.

அரசியல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது அவரது ரசிகர்களுக்கு பெருந்த மனத்தாங்கல் இருந்த போதிலும் அவரை நடிகராகக் கொண்டாடுவது இன்னும் நடைபெற்று வருகிறது. அவரது அடுத்த படமான “அண்ணாத்த” படத்தின் ஃபற்ச்டி லுக் போஸ்டர் வெளியானது.
இதையொட்டி அவரது ரசிகர்கள் ஒரு ஆட்டை வெட்டி அதன் இரத்தத்தில் போஸ்டருக்கு அபிஷேகம் செய்தனர். இந்த தகவல் கடும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிகழ்வைக் கண்டிக்காத ரஜினிகாந்த் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்.
“அண்ணாத்த திரைப்பட ஃபற்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மி மிகவும் வருந்தத்தக்கது..
அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”
என உள்ளது.
[youtube-feed feed=1]