
சென்னை,
இன்றைய ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், திரையுலகினர் தமிழகத்தை ஆண்டது போதும் என்று கூறியுள்ளார்.
ரஜினியின் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் பலவிதமான கருத்துக்களை கூறியுள்ள நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்த திரைத்துறையினர் ஆட்சி செய்தது போதும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி காட்டமாக கூறியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து 5 நாட்கள் சந்திக்க இருக்கிறதார்.
இன்றைய சந்திப்பின்போது, தற்போது நாட்டில் லஞ்சம் ஊழல்தான் தலைவிரித்து ஆடுகிறது. நான் அரசியலுக்கு வந்தால் லஞ்சம், ஊழல் தவிர்ப்பேன் என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசினர்.
ரஜினியின் கருத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பலர் இது அவரது அடுத்த பட வெளியீட்டிற்கான ஸ்டண்டு என்று கூறி வருகின்றனர். ஆனால், அரசியல் கட்சியினர் அவரது கருத்தை எதிர்த்தும் வரவேற்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை வந்த பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாசிடம் ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தை திரைத்துறையை சார்ந்தவர்கள் ஆட்சி செய்தது போதும் என கூறினார். அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக கூறிய அன்புமணி கமல் ஒரு தைரியமான நபர் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது கூறி பரபரப்பை உருவாக்கி வரும் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்து வருவதாக அன்புமணி குற்றம்சாட்டினார்.
அன்புமணியின் ரஜினி மற்றும் கமல் குறித்த நிலைப்பாடு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]