தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த், தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள தனுஷ் ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

67வது தேசிய விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம், அதாவது மே 3-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதே நாளில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்படும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இரண்டு உயரிய விருதுகளையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வாங்குகின்றனர்.