ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் பாஜக  அரசு சமீபத்தில் கல்வி வேலைவாய்ப்பில் ஓபிசி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளித்து மசோதா இயற்றியது. இதற்கு ராஜஸ்தன் ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக  பாஜவுக்கு பின்னடைவை ஏற்பட்டுள்ளது.

குஜ்ஜார் இன மக்களின் வாக்குகளை பெற 5 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பதால், இது   ராஜஸ்தான் மாநில பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை 21% -ல் இருந்து 26% க அதிகரிக்கும் மசோதா இயற்றப்பட்டு  ராஜஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, இந்த இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதால், அதிலிருந்து குஜ்ஜார் இனமக்களுக்கு  5%  இடஒதுக்கீடு  பிரித்தளிப்பதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், தற்போதுள்ள இடஒதுக்கீடு  54 சதவிகிதமாக உயர்ந்தது. இது  இந்திய அரசியல் சாசன சட்டப்படி தவறு என்றும், 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு செய்வதால் அதற்காக தனி சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு எதிர்த்து  ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், ஓபிசி மசோதாவுக்கு இடைக்கால  தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.