ஜெய்ப்பூர்:
காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும்  ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள சமூக பஞ்சாயத்து  தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை அறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணை செய்து,   ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிக்கையைச் சமர்ப்பிக்க பார்மர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்துக் காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி பிரேமா ராம் தெரிவிக்கையில்,  இந்த விவகாரத்தில்  ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.