ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாடெங்கும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இது மூன்றாம் அலை பரவல் எனக் கூறப்படுகிறது.
இதையொட்டி நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதையொட்டி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதை டிவிட்டரில் உறுதி செய்துள்ள அவர் இன்று தன்னை சந்தித்த அனைவரும் தம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.