சென்னை: நிவர் புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம்  காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட வட மாநிலங்களில் மழை தொடரும் என்று சென்னை  வானிலைமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிவர் புயல் புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை  ல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் காற்றும், மழையும் தொடரும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழையை தரும். அதன் தாக்கம்  படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் ராணிபேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும்.  தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை தொடரும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த மாவட்டங்களில் தொடர்ந்து 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும், அதுபோல் திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 55 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.