சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் சற்று அதிகமான பெய்த மழை தற்போது தூறலாக தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் நிலவியது. இந்த நிலையில், பல மாவங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதன்படி, வெப்பசலனம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 27ந்தேதிகன மழை பெய்யலாம் என்று என்றும் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், அதிகாலை 3 மணி முதல் சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்குன்ளம், மாதவரம், கோயம்பேடு, தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், பூந்தமல்லி என புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் சற்று வேகமாக பெய்த மழை தற்பேதுவரை சாரல்மழை போல தூறிக்கொண்டிருக்கிறது. இந்த மழை வெப்பத்தை குறைத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.