நீலகிரி:
கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நீலகிரியில் உதகை,பந்தலூர்,கூடலூர்,குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel