சென்னை

டுத்த  3 மணி நேரத்துக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக செனனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்தது.

நேற்று மாலை முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தற்போது சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரியில் காலை 10 அல்லது 11 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.