சென்னை:
டுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, நாமக்கல்,புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.