சென்னை: தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலம் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. திருப்பத்தூர், தி.மலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேல்பவானியில் 7 செ.மீ., திருப்பூர் மாவட்டம் ஓமலூரில் தலா 6 செ.மீ. பரளியாறு, பந்தலூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகயியுள்ளது. சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதும் விடவில்லை என வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் சேலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி, திருநெல்வேலி, குமரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.