சென்னை

சென்னையில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.   நேற்று முன் தினம், மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களிலும் பரவலாகக் கனமழை பெய்தது.   ஒரு சில இடங்களில் இதனால் மழை நீர் தேங்கி பிறகு சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.  சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டியதால் சாலைகளில் ஆங்காங்கே நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.