சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

 

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.