நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பாக பா மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில், கனமழை பாதிப்பு தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கைகள், நிவாரண உதவகிள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்து வருகிறது தென்மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ள வரலாறு காணாத கனமழை காரணமாக  தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள், பேருந்து நிலையங்கள், ரியில்வே தண்டவாளங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு, காட்டாற்று வெள்ளம் என தாமிரபரணி ஆற்றில் 80,000- கனஅடிக்கும் மேல் தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரில் மூழ்கியது.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெனரேட்டர் மூலம் இயங்கும் கட்டுபாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யபட்டுள்ளது.

அதுபோல,   குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நீடிக்கிறது..

இந்த நிலையில் கனமழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், எடுக்கப்ப்ட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும் நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருறது.