நெல்லை:  வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தில், இன்று மத்திய குழு வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. டிசம்பர் தொடக்கத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில்,  கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில்  தென் மாவட்டங்களில்  பெய்த பேய்மழையால், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும்  மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  , பல ஏரி, குளங்கள் நிறைந்து,  உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்கள் இன்னும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத அளவில் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கியும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களின் மீதும் மீட்பு படையினர் பணிகளை மேற்கொண்டனர்.

பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் தென்மாவட்டங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்ததோடு, உட்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது. அதேநேரம், மழை நீர் தொடங்கி வெள்ள நீர் வடிய தொடங்கியதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆபத்தான பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிவாரண பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறத.

இதற்கிடையில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி முதலமைச்சர் ஸ்டாலின், இன்று இரவு பிரதமர் மோடியை சந்தித்து, வெள்ள பாதிப்பு குறித்து எடுத்துரைத்து, நிவாரண உதவிகளை விரைந்த வழங்க வேண்டும் என்றும், தென் மாவட்ட வெள்ளப்பாதிப்புக்களை ஆய்வு செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி விஜயகுமார், ஜல்சக்தி துறை அதிகாரி தங்கமணி, மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி பொன்னுசாமி ஆகியோர் கொண்ட குழுவை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவினர்,   திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

முதல்கட்டமாக  நேற்று (20ந்தி) தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில் 2வது நாளாக இன்று (21ந்தேதி)  நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். மூன்று குழுக்களாக பிரிந்து அவர்கள் பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆய்வுக்கு பின் தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் வெள்ளப் பாதிப்பு விவரங்களை மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின் தமிழகத்திற்கு தேவையான நிவாரணப் பணிகளுக்காக கணிசமான தொகையை மத்திய அரசு விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.