சென்னை:

சென்னையிலிருந்து மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பு சரக்கு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சரக்கு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. 5 வேகன்களில் 2,600 கிலோ அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லப்பட்டது. வழியில் உள்ள ஸ்டேஷன்களில் பொருட்கள் ஏற்றப்பட்டது.

இரண்டாவது பார்சல் விரைவு ரயில் யஸ்வந்த்பூர் ஜங்ஷனிலிருந்து முதல் ஹவுரா வரை இயக்கப்பட்டது.இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5 வேகன்களில் 10,740 கிலோ அத்தியாவசிய பொருட்கள் ஏற்றப்பட்டன.

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், உணவு வகைகள், உணவு தயாரிப்புகள், காகிதம் உள்ளிட்ட எழுது பொருட்கள், கூரியர்கள் மற்றும் இந்த நேரத்தில் தேவைப்படும் முக்கிய மருத்துவப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.