டெல்லி: ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே ரயிலில் இருக்கைகள் கிடைக்கும். ஏனெனில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக 2வது முன்பதிவு பட்டியலை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றை அடுத்து பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய விதிகள் மூலமாக, ரயில் நிலையங்களிலிருந்து ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் 2வது முன்பதிவு  பட்டியல் தயாரிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே முதல் முன்பதிவு பட்டியல்  தயாரிக்கப்படுகிறது. ரத்து செய்யப்பட்டு, இடங்கள் காலியாகிவிட்டால், கவுண்டர்கள் மூலமாகவும், 2வது முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் வரை ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
ஆரம்பத்தில் தொற்றுநோய்களின் போது ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டன, டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைத்தன. ரயில் நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்க, முற்றிலும் தேவை இருந்தால் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.