டவா

ரு முதியவரை சாதாரண உடை அணிந்ததன் காரணமாக சதாப்தி ரெயில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது.

கான்பூரில் இருந்து டில்லி செல்லும் சதாப்தி ரெயிலில் பயணம் செய்ய ஒரு முதியவர் முன்பதிவு செய்திருந்தார். ராம் அவத் தாஸ் என்னும் பெயருடைய 82 வயதான அந்த முதியவரிடம் உறுதி செய்யபப்ட்ட பயணச்சீட்டு இருந்துள்ளது.  அதன்படி அவர் எடவா ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலில் தனது இருக்கை உள்ள பெட்டியில் ஏறச் சென்றுள்ளார். அவரை அங்கிருந்த ரெயில்வே காவலர் அந்த ரெயிலில் ஏற அனுமதிக்கவில்லை.

பார்பங்கி என்னும் நகரில் வசிக்கும் ராம் அவத் தாஸ் ஒரு மடாதிபதி ஆவார். அவர் எப்போதும் வெறும் வேட்டி மற்றும் மேல் துண்டு மட்டும் அணியும் வழக்கம் கொண்டவர் ஆவார். அவர் எடவா வில் இருந்து காசியாபாத் வரை பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு சி2 பெட்டியில் 71 ஆம் எண் இருக்கை ஒதுக்கபட்டிருந்தது.

இது குறித்து ராம் அவத் தாஸ் அளித்துள்ள புகாரில், “சதாப்தி ரெயிலில் முன்பதிவு செய்யபட்ட பயணச்சீட்டுடன் எனக்கு ஒதுக்கபட்ட இடத்தில் அமர ரெயில் பெட்டியில் ஏறிய போது ஒரு ரெயில்வே காவலர் என் உடையை பார்த்து விட்டு என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் நேரடியாக எனது உடையைப் பற்றி கூறவில்லை எனினும் என்னை தடுத்து இது நான் ஏற வேண்டிய ரெயில் பெட்டி இல்லை என கூறினார்.

நான் இதனால் அதிர்ந்து போனேன். நாம் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருப்பது போல நான் உணர்ந்தேன். எனது உடையக் கண்டு என்னிடம் பயணச்சீட்டு இருந்தும் ரெயிலில் ஏற விடாததால் நான் இவ்வாறு உணர்ந்தேன். ரெயில்வே ஊழியரின் இந்த செய்கையால் நான் மிகவும் மன வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளேன். நான் வேறு ஒரு பெட்டியில் ஏறலாம் என செல்வதற்குள் ரெயில் கிளம்பி விட்டது.” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடக்கு மத்திய ரெயில்வே பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், “இது குறித்துநடந்த விசாரணையில் அந்த முதியவர் தவறுதலாக ஜெனரேட்டர் பெட்டியில் ஏறி உள்ளார். அது தடை செய்யப்பட்ட பெட்டி என்பதால் அவரை வேறு பெட்டியில் ஏற சொல்லி உள்ளனர். அங்கு இரு நிமிடங்களே நிற்கும் என்பதால் முதியவரால் வேறு பெட்டிக்கு சென்று ஏற நேரம் கிடைக்கவில்லை. இருப்பினும் அந்த ஊழியரிடம் முதிய பயணிகளிடமன்பாக நடக்க வேண்டும் என எச்சரித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.