சென்னை

நின்று போன ரெயில் 18 திட்டத்தை மீண்டும் தொடங்க விரும்பியதற்காக தம்மை இடமாற்றம் செய்துள்ளதாக மூத்த ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைந்துள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரெயில் 18 என்னும் புதிய வகை அதிவிரைவு ரெயில் உருவாக்கப்பட்டது. இந்த ரெயில் முழுக்க முழுக்க இந்தியப்  பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகப் பலரும் புகழாரம் சூட்டினார்கள்> மணிக்கு 160 -180 கிமீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் டில்லி வாரணாசி இடையே கடந்த 8 மாதங்களாக ஒரு சிறு தடை இன்றி ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த ரெயில் தயாரிப்புக்கான பொருட்கள் கொள்முதலில்  தவறுதல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதையொட்டி இந்த ரெயில் தயாரிப்பது நிறுத்தப்பட்டது. அத்துடன் இந்த ரெயிலில் வடிவமைப்பு குறித்தும் அதற்கான பொருட்கள் கொள்முதல் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல பொருட்கள் வடிவமைப்புக்கு மாறாகக் கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் 18 ல் பொருத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.

சுப்ரான்சு

அதையொட்டி இந்த ரெயில் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த  அதிகாரியான சுப்ரான்சு இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்க முடியாததால் தென்னக ரெயில்வே பயணிகளுக்கு அளித்து வந்த சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை நிறுத்த உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரமான்சு அங்கிருந்து கடந்த வாரம் பீகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்,. இதை எதிர்த்து அவர் சென்னையிலுள்ள ரெயில்வே மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

சுப்ரான்சு அந்தக் கடிதத்தில், “ரெயில் 18 திட்டத்தில் வடிவமைப்பில்  உள்ள பொருட்களில் பல ரெயிலின் சுமுகமான பணிக்கு ஒத்து வராது எனத் தெரிய வந்ததால் அவை மாற்றப்பட்டது உணமையாகும். ஆனால் அவ்வாறு மாற்றப்பட்டதால் ரெயில் ஓட்டத்தில் எவ்வித தடையும் இல்லை. இதுவரை அந்த ரெயில் 18 எவ்வித தடையும் இன்றி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ரெயிலில் 160-180 கிமீ வேகத்துக்கு ஏற்றபடி இந்த பொருட்கள் மாற்றப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.

இந்த ரெயில் 18 என்பது நாட்டின் கவுரவப் பிரச்சினை ஆகும். இந்த ரெயில் ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் அது ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே அமைச்சர், பிரதமர் மட்டுமின்றி நாட்டுக்கே அவமானம் அளிக்கும் விவகாரம் ஆகும் என்பதால் பொருட்கள்  மாற்றப்பட்டன. இவ்வாறு நாட்டின் முக்கியமான விவகாரங்களில் இவ்வாறு சிறு மாறுதல்கள் செய்வதில் தவறில்லை. இந்த அடிப்படையில் நான் இந்த ரெயில் உற்பத்தியை மீண்டும் தொடங்க விரும்பினேன். அதற்காக நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.