டில்லி:

யில்வே உள்கட்டமைப்புக்கு ரூ .50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முன்னதாக  ஜனாதிபதி மாளிகைக்கு அதிகாரிகளுடன் சென்ற நிர்மலா, அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பட்ஜெட் நகலை வழங்கி வாழ்த்து பெற்றார். அதையடுத்து பாராளுமன்றத்துக்கு வந்த நிர்மலா முதன்முதலாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிர்மலா சீத்தாராமன்,  ரயில்வே உள்கட்டமைப்புக்கு 2018 முதல் 2030 வரை ரூ .50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்;

தண்டவாளங்கள் அமைத்தல், புதிய பயணிகள் ரயில், பயணிகள் சரக்கு சேவைகளை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கும் சில கட்டுமானங்கள் தனியார் மூலம் செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.