லஞ்சம் வாங்கிய ரெயில்வே பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

Must read

சென்னை:

தெற்கு ரெயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றியவர் தோட்டா சிவகுமார்.

2014-ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த பணிக்கான பில் பாஸ் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது அவரை சி.பி.ஐ அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. லஞ்சம் வாங்கிய தோட்டா சிவாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 30,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

More articles

Latest article